தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச்சாவடி எண்ணிக்கை குறைப்பு: அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு - salem collector office

சேலம்: மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வாக்குச்சாவடி பகுப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

all-party-meeting-in-salem-collector-office

By

Published : Sep 25, 2019, 7:37 PM IST

சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே 3 ஆயிரத்து 288 வாக்குச்சாவடிகள் உள்ளன. நகர்ப்புறங்களில் ஆயிரத்து 400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரித்து அல்லது அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்களை சேர்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 3 ஆயிரத்து 288 வாக்குச்சாவடிகளை 3 ஆயிரத்து 778 வாக்குச்சாவடிகளாகக் குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்குச்சாவடி பகுப்புக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details