திண்டுக்கல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை, விடுதலை செய்ததை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலத்தில் இன்று (அக்டோபர் 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஏஐஒய்எஃப் போராட்டம்
சேலம்: திண்டுக்கல் சிறுமியை பாலியல் வன்கொலை செய்த குற்றவாளிகளை, விடுதலை செய்ததை கண்டித்து இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும், திண்டுக்கல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட நபரை நிரபராதி என விடுவித்த காவல்துறையை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.