தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல்' - எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு - CITU State President Thyagarajan byte

சேலம்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக சிஐடியு மாநிலத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு
எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு

By

Published : Jan 6, 2020, 7:29 PM IST

சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு மாநிலத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,"விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜனவரி எட்டாம் தேதி, பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், '' பொது வேலைநிறுத்தம் நடைபெறும் அன்று சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகிலும், ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்ளப்போவதாகவும் '' அவர் கூறினார்.

எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு

தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஜனவரி எட்டாம் தேதி நண்பகல் 12 மணிக்கு 10 நிமிடங்கள் நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் சிஐடியு மாநித்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details