தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது - சேலம் அண்மைச் செய்திகள்

சேலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதிமுக பிரமுகர் கைது
அதிமுக பிரமுகர் கைது

By

Published : Jul 26, 2021, 9:48 PM IST

சேலம்: மல்லூர் அருகே வசிப்பவர் 17 வயது சிறுமி. அவரிடம் அதே பகுதியை சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் வசந்தகுமார், ஆசை வார்த்தை கூறி பலமுறை அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் வயிறு பகுதி பெரிதாக இருப்பதைக் கண்ட பெற்றோர், அதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது பாலியல் வன்புணர்வால், சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதிமுக பிரமுகர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மகளிர் காவல் துறையினர் வசந்தகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்

விசாரணையில் வசந்தகுமார், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதியானது. மேலும் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, கருவை கலைக்க முயன்றதும் தெரியவந்தது. ஏற்கனவே வசந்தகுமாருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அதிமுக பிரமுகர் வசந்தகுமார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:பாலியல் தொல்லை: மாமனார் மீது பெண் புகார்

ABOUT THE AUTHOR

...view details