தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலுக்கு நான் ரெடி..! புது வாகனத்தில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிதாக வேன் ரக வாகனம் ஒன்றில் வலம் வருகிறார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami crawling in a new Force Urbania vehicle to engage in 2024 parliament election work
நாடாளுமன்ற தேர்தலுக்கு நான் ரெடி

By

Published : Jul 2, 2023, 11:52 AM IST

சேலம்:அதிமுக தலைமை விவகாரத்தில் பிசியாக இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக அடுத்தக்கட்ட பணிகளை துவங்கி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பாஜகவுடன் ஏற்பட்ட வார்த்தை மோதலால் கூட்டணி உடையுமா என்கின்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வாதங்களை வதந்தி ஆக்கினார். மேலும் சமீபத்தில் அமித்ஷா, தமிழகம் வந்திருந்த போது எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்காமல் இருந்தார்.

அவர் உடல்நலக்குறைவால் ஓய்வில் இருப்பதால் அமித்ஷாவை சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக சேலம் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி தனது கால் மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து அரசியல் களத்தில் புத்துணர்வுடன் இறங்கி உள்ளார்.

கட்சியினரின் குடும்ப நிகழ்வுகள் மற்றும் அதிமுக கட்சி கொடியேற்ற விழாக்கள், மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வுகள் ஆகியவற்றில் உற்சாகமாக கலந்து கொள்கிறார். இந்நிலையில் நேற்று எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளான கோனேரிப்பட்டி, சின்ன சோரகை உள்ளிட்ட இடங்களில் அதிமுக கட்சி கொடியேற்றி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி "போர்ஸ்" Force நிறுவனத்தின் "அர்பேனியா" Urbania மாடல் வேனில் வந்து இறங்கினார். ஆளை மிஞ்சிய உயரம் கொண்ட ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட அந்த வாகனம் அப்போதே அனைவரின் கவனத்தையும் பெற்றது.

கண்ணைக் கவர்ந்த வாகனம்:எல்இடி டிஆர்எல்கள், எல்இடி இண்டிகேட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், புரஜெக்டர் ஹெட்லேம்புகள் இந்த வாகனத்தின் வெளிப்புற அழகை கவர்ச்சிகரமாக காட்டுகிறது. மேலும் டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங் வீல், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டது.

இது தவிர டூயல் ஏர் பேக்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா போன்ற தொழில்நுட்ப வசதிகளும் அனைத்து இருக்கைகளுக்கும் ஏசி செல்லும் வகையில் பிரத்யேக வென்ட்களும் உள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் இஞ்சினைக் கொண்டு இயங்கும் இந்த வாகனம் 10, 13, 17 எண்ணிக்கை கொண்ட இருக்கை ரகங்களில் கிடைக்கிறது.

போர்ஸ் நிறுவனம் இந்த வாகனத்தை 2020 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி இருந்தது. கரோனாவினால் விற்பனை தாமதமாக கடந்த ஆண்டு இறுதி முதல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அரசியல்வாதிகளின் பிரசாரங்களுக்கு ஏற்ற அத்தனை அம்சங்களையும் கொண்ட இந்த வாகனத்தை தான் தற்போது எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துகிறார்.

அவரின் உடல்நிலை காரணமாக அவரது பழைய வாகனம் பயணத்திற்கு சௌகரியமாக இல்லாத காரணத்தால் இந்த வாகனம் வாங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நல்ல உயரம் கொண்ட சொகுசான இருக்கைகளைக் கொண்ட இந்த வாகனம் அவருக்கு கால் வலி ஏற்படுத்தாமல் நெடும் பயணம் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்பதால் வாங்கப்பட்டு இருப்பதாக சேலம் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சியை பலப்படுத்தும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் பயணம் என்று சுழன்றடிக்க இருக்கும் எடப்பாடி பழனிசாமி, பயணத்திற்கு ஏற்ற வகையில் வாகனத்தின் இருபுறமும் பாதுகாப்பு வீரர்கள் நின்று செல்லும் வகையில் கைப்பிடி, படிக்கட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கும் இந்த வாகனத்தை தான் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த போகிறார் என்றும் , அதற்கு முன்னோட்டமாக பிரச்சாரம் செய்யும் வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் அதிமுக நிகழ்வுகளில் அவர் பங்கேற்று உரையாற்றி வருகிறார் என்றும் கட்சியினர் உற்சாகமாக தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details