சேலம்: வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சேலம் நகர ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் வேளாண் சட்டம், மின்சார சீர்திருத்த சட்டம் ஆகிவற்றை திரும்பப் பெற வேண்டும், கூட்டுறவு வங்கிகளை தேசியமயமாக்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.