தமிழ்நாட்டின் முக்கிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட மொத்தம் 12 மாவட்டங்களின் பாசனத்துக்கு நீராதாரமாக உள்ளது.
அதில் டெல்டா மாவட்ட விளைநிலங்களின் குறுவை சாகுபடிக்காக பொதுப்பணித் துறை சார்பாக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் அந்தக் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறப்பில் தாமதம் ஏற்பட்டுவந்தது.
இந்த நிலையில் இந்தாண்டு மேட்டூர் அணையில் தற்போது 101.72 அடி நீர்மட்டம் உள்ளதால் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.