உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலம் கோட்டையைச் சேர்ந்த முஹமத் பத்ருத்தீன் என்பவருக்கும் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆவணியூர் கோட்டையைச் சேர்ந்த சபினா என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாளை ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இரு திருமண வீட்டார் ஒன்றுகூடி முக்கிய உறவினர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
முன்கூட்டியே நடந்த திருமணம் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் ஊரடங்கு வேண்டுகோளை பிரதமர் மோடி விடுத்துள்ளார். இதனையடுத்து இதேபோன்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறவிருந்த திருமண நிகழ்வுகள், சுபகாரியங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் ஊரடங்கு வேண்டுகோள் - திருமணம் ஒத்திவைப்பு