தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து - போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சேலம்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து

By

Published : Dec 28, 2019, 10:16 PM IST

சேலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

அதில், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும், அதிமுகவைச் சேர்ந்த எஸ்.வனசுந்தரி, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும், பாமகவைச் சேர்ந்த டி.தினேஷ்குமார், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு பெற்ற அதிமுகவைச் சேர்ந்த திரு.வி.கணேசன், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடையப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு பெற்ற அதிமுகவைச் சேர்ந்த ஆர்.பெருமாள் ஆகியோர் முதலமைச்சரிடமிருந்து வாழ்த்து பெற்றனர்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், அதிமுக அமைப்புச் செயலாளரும், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினருமான செம்மலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: செல்வாக்கற்ற கட்சிகள் ஒன்றுசேர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன - பழனிச்சாமி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details