சேலம்:இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேமல் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த p. நாகராஜனை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகி நீக்கம் - அதிமுக ஒன்றிய விவசாயப் பிரிவுத் தலைவர் நீக்கம்
சேலம் எடப்பாடி வடக்கு தொகுதி, அதிமுக ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் நாகராஜன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக நிர்வாகி நீக்கம்
அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்ளகிறோம்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'விரைவில் சசிகலா தலைமையில் அதிமுக இயங்கும்'