தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று தடுப்பு பணியில் தூய்மைப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் , அவர்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசிய பொருள்கள் வாங்க நேரம் கிடைக்காத சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி இன்று சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஏழு கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், அரிசி, பருப்பு உள்ளிட்ட கரோனா நிவாரண பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ராஜேந்திரன், சுமதிபாபு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
இதையும் படிங்க: நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!