கரோனோ நோய்த்தொற்று பொதுமக்களிடையே பரவுவதைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு காரணமாக ஏழை எளியவர்கள், கூலித் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து உணவின்றித் தவித்துவருகின்றனர்.
இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உத்தரவின்பேரில் அக்கட்சியினர் சார்பில் மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன.