தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": ஈரோடு கிழக்கு வேட்பாளர் தென்னரசு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தென்னரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு வேட்பாளர் தென்னரசு
ஈரோடு கிழக்கு வேட்பாளர் தென்னரசு

By

Published : Feb 1, 2023, 5:30 PM IST

"அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": வேட்பாளர் தென்னரசு பேட்டி

சேலம்:ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. அத்தொகுதி முழுவதும் கட்சி கொடிகள் பறந்து வரும் நிலையில், அதிமுகவில் தொடர்ந்து வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசை வேட்பாளராக அறிவித்தார். இதனை அடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு, சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இவருடன் தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு நன்றாக, பிரகாசமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தமிழ்நாடு அரசு தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்வார்கள்": அமைச்சர் எல்.முருகன்

ABOUT THE AUTHOR

...view details