சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரவணன் களமிறங்கியுள்ளார். அவர் கோரிமேடு பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுதனது தேர்தல் பரப்புரையைத்தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க, தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
பரப்புரையைத் தொடங்கினார் சேலம் வேட்பாளர்! - அதிமுக
சேலம்: மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் சரவணன் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
admk
வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் அதிமுகஅமைப்புச் செயலாளர் பாண்டியன், அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவைஉறுப்பினருமான வெங்கடாச்சலம், எம்.பி. பன்னீர்செல்வம், பாஜக மாவட்டத்தலைவர் கோபிநாத், தேமுதிக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Last Updated : Mar 27, 2019, 11:56 AM IST