தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் வாக்கு சேகரித்துவருகின்றனர். அதன்படி சேலத்தில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து நடிகர் கருணாஸ் தலைமையிலான குழுவினர் வாக்குச் சேகரித்தனர். அப்போது நடிகர் கருணாஸ் பேசுகையில், சென்ற தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேபோல் இந்தாண்டும் எங்களது அணி வெற்றிபெற்றால், சேலம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனை, திண்டுக்கல்லில் உள்ள தனது சொந்த நிலத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நலிவடைந்த நாடக நடிகர்கள் இறுதிக் காலத்தை அமைதியாக செலவழிக்க முதியோர் இல்லம் ஆகியவை அமைக்கப்படும் உறுதியளித்தார்.