சேலம் மையப்பகுதியில் உள்ள சத்திரம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு பாலாஜி என்பவரின் மூன்ரு வயது மகன் யோகேஸ்வரன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டான். இதையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் இரண்டு மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேலவன், அவரது மனைவி ரேவதி மற்றும் மகள் ஜெயா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைய கடத்தல் வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது. - arrested
சேலம் : ஆண் குழந்தையை கடத்திய வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது காவல்துறையினர் செய்துள்ளனர்.
பின்னர், விசாரணையில் வேலவன், குழந்தை யோகேஸ்வரன் வீட்டின் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார், இவருக்கு மூன்று லட்சம் கடன் இருந்துள்ளதாகவும் அதை அடைப்பதற்கு பணம் இல்லாததால் குழந்தையை கடத்தி மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு குழந்தையைக் கடத்தியுள்ளனர். காவல்துறையினர் தேடுவதை அறிந்து குழந்தையை சேலைதான்பட்டி என்ற பகுதியில் விட்டு தப்பி ஓடியுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.