சேலம் மாவட்டம் எடப்பாடியில் விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட சிலைகளை கல்வடங்கம் காவிரி ஆற்றில் கரைப்பது அப்பகுதி மக்களின் வழக்கம். அந்த வகையில் இன்று சேலம் எடப்பாடி,கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் வந்து காவிரி ஆற்றில் நீராடி விநாயகர் சிலைகளை கரைத்துச் சென்றனர்.
விநாயகர் சிலையைக் கரைக்க வந்த லாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 40க்கும் மேற்பட்டோர் காயம்
சேலம்: எடப்பாடி அடுத்த கல்வடங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை, கரைக்க வந்தவர்களின் லாரி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
accident-near-edappadi-one-person-died
அப்படி விநாயகர் சிலைகளை கரைக்க, சேலம் அன்னதானம்பட்டி பகுதியில் இருந்து வந்தவர்களின் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்விற்கு வந்தவர்கள் விபத்துக்குள்ளானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.