தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் கோர விபத்து; பேருந்து ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு! - மகுடஞ்சாவடி அருகே கோர விபத்து

சேலம்: மகுடஞ்சாவடி அருகே இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Salem

By

Published : Nov 11, 2019, 4:11 PM IST

சேலம் வழியாக கேரளா சென்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து மகுடஞ்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது ஈரோடு - சேலம் வழியாக வந்த தனியார் பேருந்து மீது மோதியதில் டிராவல்ஸ் பேருந்து ஓட்டுநர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

பேருந்தில் பயணம் செய்த 24 பேர் படுகாயமடைந்தனர். இதில், குழந்தைவேலு, ஆறுமுகம், அம்மாயி, மோகன், ராம்குமார், சண்முகம், சிவகுமார், சசிகுமார், லட்சுமணன், அண்ணாதுரை, சிந்துஜா, பாலம்மாள், தினேஷ் ஆகியோர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம்

ABOUT THE AUTHOR

...view details