சேலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சட்டபூர்வ நிர்வாகம், பொதுவிநியோகத் திட்டம், தொழிலாளர் நல சட்டங்கள் பாதுகாப்பு குறித்து அலுவலர்கள் சிறப்புரையாற்றினர். இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மத்திய அரசு பொது விநியோக திட்டத்தை சிதைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதை திரும்ப பெறவேண்டும். மாநில அளவில் சிறப்பாக செயல்படும் பொது விநியோக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்பதிலும், இரவு பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தொழிலாளர் நல சட்டங்கள் மூலம் போராடி பெற்ற உரிமைகளை பாதிக்கும் வகையில், மத்திய அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி மேலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் அறிவித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டும் இதே அளவுதான் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு கூடுதலாக விற்பனை நடந்துள்ள நிலையில், 20 விழுக்காடு போனஸ் என்பது போதாது என்றும், கூடுதலாக வழங்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி காவல் அலுவலர் சுட்டுக் கொலை!