சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி பாயும் மாவட்டங்களில், மக்கள் ஆடி மாதம் முதல் நாளை ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை அவரவர் இல்லங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
தேங்காய் சுடும் திருவிழா
அதன்படி ஆடி 1ஆம் தேதியான இன்று (ஜூலை.17) சேலம் அரிசிபாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பாக அவல், பொட்டுக் கடலை, நாட்டுச் சக்கரை, எள்ளுஉள்ளிட்ட இனிப்பு பொருள்களால் நிரப்பிய தேங்காயை தீயில் சுட்டு பின்னர் உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
மேலும், திருமணமான புதுமணத் தம்பதிகள் இந்த ஆடி முதல் நாளை புத்தாடை அணிந்து ஜோடியாக தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: பிறந்தது ஆடி, குறைந்தது தங்கம்!