தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமான 27 நாட்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை: நடந்தது என்ன? - crime death

சேலத்தில் வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 27 நாட்களே ஆன இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 27 நாட்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருமணமான 27 நாட்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை

By

Published : Dec 10, 2022, 7:08 PM IST

சேலம்:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் வசுமதி. இவருக்கும் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் மிரட்டியதால் மனம் உடைந்த வசுமதி, கடந்த சில நாட்களுக்கு முன், தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை கண்ட அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசுமதியை மீட்டு திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வசுமதி நேற்று (டிச.9) அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து வசுமதி சாவுக்கு காரணமான கணவர் மற்றும் உறவினர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி, வசுமதி உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

திருமணமான 27 நாட்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை

இதையும் படிங்க: பெண்களின் நிர்வாண வீடியோக்களை வைத்து மிரட்டிய கொடூரன் - ஸ்கெட்ச் போட்டுதூக்கிய போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details