சேலம்:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் முயல் வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான கண்காட்சி மற்றும் பயிற்சிப்பட்டறை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்றது.
இதில் நியூசிலாந்து வெள்ளை ஒயிட் ஜெயன்ட், சோவியத் சின்சில்லா, கிரேஜெயன்ட் டச்சு போன்ற உலகப் பிரபலமான முயல்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.
சிறிய மற்றும் பெரிய ஆண், பெண் முயல்களுக்கான கூண்டுகளும் தண்ணீர் மற்றும் தீவன கலன்களும், அடர் தீவனத்தில் முயல்களுக்குத் தேவையான குச்சி தீவனங்களும், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கால்நடை வளர்ப்புக்குத் தேவையான தீவனப்பயிர்கள் கோ 4 கோ 5 வேலி மசால், முயல்மசால் போன்ற பயிர்களும் அதற்கான விதைகளும் தீவனப்பயிர்களை நறுக்கக்கூடிய உபகரணங்களும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.