சேலம் - அம்மாபேட்டை அருகே ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் நாம மலை உள்ளது. இந்த மலையில் இரவு, திடீரென காட்டுத் தீ பற்றியது. இந்தக் காட்டு தீயானது, மலையில் பல்வேறு பகுதியில் பரவியதைத் தொடர்ந்து, மலையிலிருந்த மரங்கள் எரிந்து சேதமாகின.
இந்தத் தீயானது நான்கு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்தது. இதனால், அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது. பொதுவாக மலைப்பகுதிகளில் கோடை காலத்தில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரியும்.