தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியால் பரபரப்பு

சேலம் அருகே உள்ள வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

சேலம் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியால் பரபரப்பு
சேலம் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியால் பரபரப்பு

By

Published : Jan 28, 2022, 8:03 PM IST

சேலம்:வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தில் இன்று 11:30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

அடுத்தடுத்து இரண்டு ஜெட் விமானங்கள் வானில் பறந்ததால், பெரும் சப்தம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சப்தத்தினால் பொதுமக்கள் அச்சமடைந்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நிலநடுக்கத்தை அளவிடும் கருவியான ’சீமோஸ் கிராபி’ கருவியை வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் நில அதிர்வு எதுவும் பதிவாக வில்லையென்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக நீர்முள்ளிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் என்பவர் கூறுகையில் ,”வானத்தில் பெரும் சப்தம் கேட்டது. அதனுடைய அதிர்வை நாங்கள் உணர்ந்தோம். உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தோம். வீடுகளுக்கும் உள்ளே இருந்த பொருள்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேலத்தில் அதிக வட்டி ஆசைக்காட்டி பல கோடி மோசடி - தலைமறைவான நகைக் கடைக்காரர்!

ABOUT THE AUTHOR

...view details