சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி ரமேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக ரமேஷ் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 50 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார்.
போதிய வருவாய் இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திருப்பி செலுத்த முடியாத நிலையில் நேற்றிரவு பணம் கொடுத்த ஜெயக்குமார் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த ரமேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கடன் கொடுத்த ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ரமேஷ் குடும்பத்தினர் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க கந்துவட்டியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:கார் வெடி விபத்தில் இறந்தவர் வீட்டில் வெடிமருந்து...! எதிர்கால திட்டம் என்ன..!