தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு வயது சிறுமி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை அறிவிப்பு - Santoshkumar sentenced to death

கோயம்புத்தூர் : பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ்குமாருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.

death sentence
death sentence

By

Published : Dec 27, 2019, 3:19 PM IST

Updated : Dec 27, 2019, 3:27 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடையில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது குறித்து துடியலூர் அனைத்து மகளீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கிற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பின் வாதம் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி ராதிகா முன்பு சந்தோஷ்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தோஷ்குமார் குற்றவாளி என அறிவித்தார். சந்தோஷ்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரம் மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 18ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படும் முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மேலும் ஒருவருக்கு தொடர்பு?

Last Updated : Dec 27, 2019, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details