தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் தகராறு, அடிதடி - ஒருவர் படுகாயம் - alcohol addicts fight in selam

சேலத்தில் மதுபோதையில் சாலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுபோதையில் ஒருவரையொருவர் தாக்கியதில் ஒருவர் படுகாயம்!
மதுபோதையில் ஒருவரையொருவர் தாக்கியதில் ஒருவர் படுகாயம்!

By

Published : Aug 9, 2022, 12:45 PM IST

Updated : Aug 9, 2022, 12:53 PM IST

சேலம்: கன்னங்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த கோவிந்தசாமி, அருள்குமார் மற்றும் தங்கமணி ஆகிய மூவர் மது அருந்தியுள்ளனர். பின்னர் மதுக்கடையில் இருந்து வெளியே வந்த மூவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கைகலப்பாக மாறிய தகராறில், சாலையிலேயே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது தங்கமணி என்பவரை அருள்குமார், தான் வைத்திருந்த கத்தியால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த தங்கமணி சாலையில் விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி காவல்துறையினர், தப்பி ஓடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய 2 பேர் உயிரிழப்பு

Last Updated : Aug 9, 2022, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details