சேலம் மாவட்டம், மேச்சேரியை அடுத்த காமனேரி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். குடிப்பழக்கம் உடைய இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் இவர், குடிப்பதற்கு பணம் கேட்டு லட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட அவர், மிகுந்த ஆத்திரமடைந்து தான் வசித்துவந்த குடிசை வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதில், வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம், அரிசி, பருப்பு உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.