தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை - 3 members

சேலம்: பூலாவரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

By

Published : Mar 30, 2019, 2:32 PM IST

சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், தன் மனைவி சாந்தி, மகள் ரம்யா மற்றும் மகன் தீனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தனது மகன் தீனாவை அவரது பாட்டி வீட்டில் தூங்க செல்லுமாறு ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தற்கொலை

அதன்படி தீனாவும் தனது பாட்டி வீட்டிற்கு உறங்கச் சென்றுவிட்டு, மீண்டும்இன்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டினுள் தனது தாய், தந்தை, சகோதரி ரம்யா ஆகியோர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, தீனா கதறி அழும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து கொண்டாலம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின், மூவரின் சடலங்களையும் மீட்டு போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தீனாவின் பெற்றோர்கள் மற்றும் சகோதரி ரம்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details