தமிழ்நாட்டில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. இன்று ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால், சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேட்பாளர்களின் கூட்டம் அலைமோதியது.
இன்று வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி கனகவள்ளி வேட்புமனு தாக்கல் செய்தார். முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவராகப் போட்டியிடும் கனகவல்லி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகித்துள்ளார்.