சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ரவுடி கோழி பாஸ்கர் (41), ராஜா(37). சகோதரர்களான இருவர் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பிணையில் வெளியே வந்த இருவரும் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்ததால், இருவரையும் பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, காவல் துறையினர் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பெண்கள் தீக்குளிக்க முயற்சி!
சேலம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கோழி பாஸ்கரை சந்திக்க அவரது மனைவி உஷா மற்றும் இரண்டு மகள்கள் செல்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர், நேற்று (நவம்பர் 14) அதிகாலை 3 மணியளவில் சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதை கண்டித்து, பாஸ்கரின் மனைவி உஷா, இரண்டு மகள்கள், தாய் மகாலட்சுமி, சகோதரி லதா உள்பட 8 பெண்கள் நேற்று நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், உடனடியாக தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.