தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்த ஆம்னி பேருந்து - 8 பயணிகள் காயங்களுடன் தப்பினர்! - 8 Passengers Injured In

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மேட்டூர் அருகே சென்றபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், பேருந்து முழுவதும் எரிந்து சேதமாகியது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 30, 2023, 6:55 PM IST

மேட்டூரில் கொளுந்து விட்டு எரிந்த ஆம்னி பேருந்து - 8 பேர் காயம்

சேலம்:கோயம்புத்தூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம், பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து (ஜன.29) நேற்றிரவு 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த சாம்பள்ளி வந்தபோது பேருந்தில் முன் பகுதியில் கரும்புகை வெளியாகியுள்ளது. இதனைக் கண்ட ஓட்டுநர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். பின், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேகமாக கீழே இறங்க தொடங்கினர்.

அப்போது பேருந்து முழுவதும் மளமளவென கொளுந்து விட்டு தீப் பற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக கருமலை கூடல் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக் கூடாய் காட்சி அளித்தது.

மேலும், இந்த தீ விபத்தில் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என மொத்தம் எட்டு பேர் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகின. இந்த விபத்து குறித்து கருமலை கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சி: சிலிண்டர் நிரப்பும் ஆலையில் பெரும் விபத்து தவிர்ப்பு - பணி பாதுகாப்பு வழங்க ஊழியர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details