தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் மக்களவைத் தொகுதியில் 77.39% வாக்குப்பதிவு!

சேலம்: மக்களவைத் தொகுதியில் மொத்தம் 77.39% வாக்குப்பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புகாட்சி

By

Published : Apr 19, 2019, 7:24 AM IST

தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கியது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.

ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று பேரவை தொகுதிகள் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியிலும், மேட்டூர் பேரவை தொகுதி தருமபுரி மக்களவைத் தொகுதியிலும், சங்ககிரி பேரவை தொகுதி நாமக்கல் மக்களவைத் தொகுதியிலும் வருகிறது.

இந்நிலையில் வியாழன் (ஏப்.18) மாலை 6 மணி நிலவரப்படி 77.39 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 638283, பெண்கள் 608152, இதர் 48 பேர் என மொத்தம் 12,46,483 பேர் வாக்களித்தனர்.

மொத்தம் உள்ள 16,11,982 வாக்காளர்களில் 12,46,483 பேர் (77.39%) வாக்களித்துள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறை, மத்திய துணை ராணுவப் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையான சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details