சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் அருகே கூல்ட்ரிங்க்ஸ் கடை, முடிதிருத்தும் கடை, மருந்து கடை, பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கடைகள் உள்ளன. வழக்கம்போல நேற்று இரவு கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இன்று காலை கடைகளை திறக்க உரிமையாளர்கள் வந்தனர். அப்போது, அடுத்தடுத்து இருந்த 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, கடைகளில் இருந்த மொத்தம் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் திருடு போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
காவல் நிலையம் அருகே இருக்கும் கடைகளில் 'கை' வைத்த கொள்ளையர்கள்!
சேலம்: ஓடும் ரயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து சேலம் மக்கள் இன்னமும் மீளாத நிலையில், சூரமங்கலம் காவல் நிலையம் அருகே இருக்கும் 7 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கொள்ளை நடந்த கடைகளை சோதனையிட்டனர். சாலையோரம் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.