பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில், நேற்று (செப்.05) நள்ளிரவு ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி. செட்டிப்பட்டி என்ற பகுதியில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 40 மூட்டை பான்பராக், ஐந்து மூட்டை குட்கா பொருள்கள், கம்பளித் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
6 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்கா பறிமுதல் அதன் மதிப்பு ஆறு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சலீம் (29) என்பதும், அவருடன் வந்தவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலீப் (29) என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் பெங்களூருவில் இருந்த தூத்துக்குடிக்கு குட்கா கடத்திச் சென்றதும் உறுதியானது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர், கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:மனைவி பிரிந்த விரக்தி... ஆத்திரத்தில் மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகன்!