தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிவியல் கண்காட்சியில் 500 மாணவர்கள் பங்கேற்பு - 500 students participating in science fair

சேலம்: ஓமலூர் அருகே பள்ளி- மாணவ மாணவியர் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி  நடைபெற்றது.

science fair
science fair

By

Published : Feb 1, 2020, 11:11 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சிக்குள்பட்ட தனியார் பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்புகளை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தினர்.

சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்தும், அதைத் தடுப்பது குறித்தும், குறைவான செலவில் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் உபகரணம், நெகிழிப் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அளவிடுவது போன்ற 500-க்கும் மேற்பட்ட படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

அறிவியல் கண்காட்சியில் 500 மாணவர்கள் பங்கேற்பு

கண்காட்சியில் வாக்களிக்கும் இயந்திரம், மனித சிறுநீரகத்தின் செயல்பாடுகள், ஹெலிகாப்டர், அடர்ந்த காடுகளில் வசிக்கும் விலங்கினங்கள் போன்றவற்றையும் காட்சிப்படுத்தியது பார்ப்பவர்களைப் பிரமிக்கவைத்தது. கண்காட்சியில் பள்ளி தலைமையாசிரியர் மார்கிரேட், பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்று கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டி, சிறந்த படைப்பாளர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: பணியிடமாற்றம் செய்யப்பட்ட குடிநீர் வாரிய அலுவலர் விஷமருந்தி தற்கொலை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details