சேலம்:கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான (mettur dam) நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியிலிருந்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக (surplus water) அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. நேற்று (நவம்பர் 18) மாலை வரை 16 கண் உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது 28 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.