தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடை உரிமையாளரை கட்டி போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை! - குற்றச் செய்திகள்

சேலம்: செவ்வாய்பேட்டை பகுதியில் அழகுசாதன மொத்த வியாபார கடையின் உரிமையாளரை கட்டிப் போட்டு, 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Crime news
Salem district crime news

By

Published : May 22, 2021, 7:08 AM IST

சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை தெய்வநாயகம் தெருவில் அழகுசாதன பொருள்கள் மொத்த வியாபார கடை வைத்து நடத்தி வருகிறார்ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் குமார் (29).

இவரது கடையில் பணியாளராக வேலை செய்து வந்த ஓம் பிரகாஷ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் நேற்று முன்தினம் (மே.19) மாலை கடைக்கு வந்துள்ளார்.

அப்போது மோகன்குமார் கடையின் மேல் தளத்திலுள்ள தனது வீட்டின் படுக்கை அறையில் இருந்துள்ளார். அத்துமீறி படுக்கையறைக்குள்ளே நுழைந்த ஓம் பிரகாஷ், அவரது கூட்டாளிகள், மோகன் குமாரைத் தாக்கி, அவரின் கைகளைப் பின்புறமாகக் கட்டி போட்டுவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து பணத்தை எங்கே வைத்திருக்கிறாய் என்று மிரட்டியுள்ளனர்.

உயிருக்கு பயந்த மோகன்குமார் பணம் இருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறார். உடனடியாக அங்கு சென்று பீரோவை திறந்த ஓம் பிரகாஷ் அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து பீரோவிலிருந்த 50 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோகன் குமாரின் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர் .

இதனைத் தொடர்ந்து மோகன்குமார் தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டு உறவினர்களை அழைத்திருக்கிறார் . அதன் பின்னர் வந்த உறவினர்கள் மோகன் குமாரின் கட்டுகளை அவிழ்த்து விட்டு நடந்ததை விசாரித்துள்ளனர் . இதனைத் தொடர்ந்து சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் மோகன் குமார் புகார் கொடுத்து உள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 50 லட்ச ரூபாயை கொள்ளையடித்தது சென்ற ஓம் பிரகாஷ், அவரின் கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் .

ABOUT THE AUTHOR

...view details