சேலம் மாவட்டம், காடையாம்பட்டியிலுள்ள மோரூர் காலனியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள், சாக்கடைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதை சீரமைக்க தமிழ்நாடு அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சட்டமன்ற நிதியிலிருந்து சுமார் 50லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்களுக்கான பணிகளை ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கிவைத்தார்.