தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக வேட்பாளர் ஏமாற்றி வெற்றிபெற்றதாகக் கூறி 5 பேர் மனு

சேலம்: பாகல்பட்டி ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தி 5 வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

By

Published : Jan 7, 2020, 7:44 PM IST

பாமக வேட்பாளர் ஏமாற்றி வெற்றிபெற்றதாகக் கூறி 5 பேர் மனு
பாமக வேட்பாளர் ஏமாற்றி வெற்றிபெற்றதாகக் கூறி 5 பேர் மனு

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த 2ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஓமலூர் ஒன்றியம் பாகல்பட்டி 16ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாகவும், எனவே மறு தேர்தல் மூலம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற 5 வேட்பாளர்களான அழகம்மாள், தனம், கமலா, வளர்மதி, அம்சவல்லி ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து புகாரளித்த அவர்கள் கூறும்போது, இட ஒதுக்கீடு மறுவரையறைப்படி இது ஆதிதிராவிடர் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட இடம். ஆனால் பாமகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், பாகல்பட்டி ஊராட்சி செயலாளர் இருவரும் இணைந்து பினாமியாக இருந்த ஒருவரை போட்டியிட வைத்து முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினர்.

பாமக வேட்பாளர் ஏமாற்றி வெற்றிபெற்றதாகக் கூறி 5 பேர் மனு

குறிப்பாக வாக்குப்பதிவு பெட்டி எடுத்துச் செல்லும்போது பெட்டியை மாற்றியும், வாக்கு எண்ணும் மையத்தில் ஏணி சின்னத்திற்கு அதிக வாக்குகள் பதிவானதுபோல பேலட் பேப்பரை மாற்றியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினர். மேலும் பாகல்பட்டி ஊராட்சியில் மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிரபல ஓவியக் கலைஞர் ஈஷா யோகா மையத்தில் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details