தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜனவரியில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணித்த 4,086 பேரிடம் ரூ.18 லட்சம் வசூல் - tamilnews

சேலம்: ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்செய்த 4,086 பேரிடம் 18 லட்சத்து 94 ஆயிரத்து 956 ரூபாய் அபாராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தென்னக சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம்
சேலம்

By

Published : Feb 13, 2020, 12:56 PM IST

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், பயணச்சீட்டு இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் சேலம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் பயணச்சீட்டுப் பரிசோதனை மேற்கொண்டனர்.

டிக்கெட் இல்லாமல் பயணித்த 4,086 பேரிடம் சுமார் 18 லட்சம் ரூபாய் வசூல்

இந்தச் சோதனையில், பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 4,086 பேரை ஹரிகிருஷ்ணன் குழுவிடம் சிக்கினர். அவர்களிமிருந்து 18 லட்சத்து 94 ஆயிரத்து 956 ரூபாய் அபாராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வதை ரயில் பயணிகள் தவிர்க்க வேண்டுமெனவும் தென்னக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் கைவரிசை - காவல் துறையினர் வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details