தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக ஒடிசாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சேலத்திற்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரான ஆஷிஷ் குமார் பாட்டியா (30) இன்று (மார்ச்.24) அதிகாலை தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சேலம் வந்துள்ள ஒடிசா சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி - தொழில் பாதுகாப்பு படை வீரர் தொழில் பாதுகாப்பு படை வீரர்
சேலம்: ஒடிசாவிலிருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சேலம் வந்த தொழில் பாதுகாப்பு படை வீரர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி
அதனைத் தொடர்ந்து சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த சக வீரர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிஷ் குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக அரசு வாகனத்தை திருடிய நபர் கைது!