தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்ட மூவர் குணமடைந்து வீடு திரும்பினர்! - சேலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூவர் குணமடைந்து வீடு திரும்பினர்

சேலம்: அரசு தலைமை பொது மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் மூன்று பேர் வீடு திரும்பினர்.

வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்
வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்

By

Published : Apr 19, 2020, 1:23 PM IST


சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் 24 பேர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உணவு வகைகளுடன் தீவிர சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கரோனா பாதித்தவர்கள் உடல் நலம் தேறி வந்தது. இதனிடையே இந்தோனேஷிய மதபோதகர்கள் நால்வர், சென்னை வழிகாட்டி உள்ளிட்ட ஐந்து பேர் முழுமையாக குணமடைந்தனர்.

இதுதவிர சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த ஒருவர், களரம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் என இருவர் குணமடைந்த நிலையில் சென்ற வியாழக்கிழமை அன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த மேலும் மூன்று பேர் நேற்று (ஏப்ரல் 18) மாலை வீடு திரும்பினர். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் இதுவரை 10 பேர் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்

நேற்று குணமடைந்த மூன்று பேரும் தனி வார்டிலிருந்து வெளியே வரும்போது சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே.பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் தனபால், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் நிர்மல்சன் உள்ளிட்டோர் காய்கறி, பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களை வழங்கி, கைகளைத் தட்டி வழியனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: திருவாரூர், நாகையைச் சேர்ந்த 14 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details