தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் உடற் தகுதித்தேர்வில் 800 இளைஞர்கள் பங்கேற்பு! - சேலம் இரண்டாம் நிலை காவலர்கள் உடற் தகுதித் தேர்வு

சேலம்: ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதித்தேர்வில் 800க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றனர். தேர்வினை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டார்.

உடல் தகுதித் தேர்வு

By

Published : Nov 19, 2019, 2:11 PM IST

தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் பணியாற்ற இரண்டாம் நிலைக் காவலரைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வில் இன்று கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், ஓட்ட பந்தயம் ஆகியவை நடந்தன.

சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள அம்மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த உடற்தகுதித் தேர்வில் இன்று காலை 800க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதலில் அவர்களுக்கு ஆறு மீட்டர், ஐந்து மீட்டர் கயிறு ஏறும் போட்டி நடைபெற்றது.

கயிறு ஏறுதலில் பெரும்பாலான இளைஞர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். கயிற்றின் மேல் ஏறி பாதிவரை சென்ற பலர், அதற்கு மேலே ஏற முடியாமல் கீழே விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. இதையடுத்து 400 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தத் தேர்வை சேலம் மாநகரக் காவல் ஆணையாளர் செந்தில்குமார், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் பிரதீப்குமார் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஆகியோர் பார்வையிட்டனர்.

காவலர் உடற் தகுதித் தேர்வு

இதையும் படியுங்க: மகளைக் கொடூரமாகத் தாக்கும் தாய் - காவல் துறை நடவடிக்கை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details