சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மாவட்டத்தில் 291 நபர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானது. அதன் விவரம் பின்வருமாறு:
சேலம் மாநகராட்சி - 144
எடப்பாடி - 14
எடப்பாடி நகராட்சி - 3
காடையம்பட்டி - 8
கொளத்தூர் - 1
கொங்கணாபுரம் - 1
மகுடஞ்சாவடி - 4
மேச்சேரி - 2
மேட்டூர் - 3
மேட்டூர் நகராட்சி - 2
நங்கவள்ளி - 10
ஓமலூர் - 23
தாரமங்கலம் - 8
வீரபாண்டி - 16
சங்ககிரி - 9
ஆத்தூர் - 2
ஆத்தூர் நகராட்சி - 2
அயோத்தியாப்பட்டணம் - 3
பேளூர் - 5
பெத்தநாயக்கன்பாளையம் - 7
பனமரத்துப்பட்டி - 7
தலைவாசல் - 2
வாழப்பாடி - 1
மாவட்டத்தில் இருப்பவர்களில் 279 நபர்களுக்கும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 12 நபர்களுக்கும் என மொத்தம் 291 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 495 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 13 ஆயிரத்து 905 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்
2 ஆயிரத்து 327 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 263 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை கொன்ற கணவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு