ராஜீவ்காந்தி 28ஆவது நினைவு தினம் - காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம் - Peace procession
சேலம் : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 28ஆவது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சர்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அன்றைய தினம் நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சேலம் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் இன்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சேலம் ஆனந்தா பகுதி காமராஜர் சிலை தொடங்கி டவுன் ரயில்வே ஸ்டேஷன் வழியாக டாக்டர் சுப்பராயன் தெரு ஈபி ஆபீஸ் தெரு மற்றும் டாக்டர் ராமநாதன் தெரு வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் ராஜீவ் காந்தி சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.