சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்த வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருசக்கர வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த மே 10ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரையில் சாலையில் சுற்றித் திரிந்த 20 ஆயிரத்து 604 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2ஆயிரத்து 738 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 746 வாகனங்கள் வாகன ஓட்டிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,738 வாகனங்கள் பறிமுதல்!
சேலம்: கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் திரிந்த 2 ஆயிரத்து 738 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2738 வாகனங்கள் பறிமுதல்!
இதுகுறித்து சேலம் மாநகரப் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், "சேலம் மாநகர பகுதிகளில் தேவையின்றி சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது எதிர்வரும் காலங்களில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க:ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அமைச்சரிடம் வழங்கிய தன்னார்வலர்கள்!