சேலம்:கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக 46 ஆயிரம் கன அடியிலிருந்து 2 லட்சம் கன அடி அளவுக்கு நீர் வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) காலை 09:30 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 1,85,000 கன அடியிலிருந்து 2,00,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம் 23000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 16 கண் பாலம் வழியாக 1,77,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் - எடப்பாடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.