தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளம் புனரமைப்பு - 18th-century pond, reconstruction, Salem, asthampatti

சேலம் : அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தெப்பக்குளத்தில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது.

18th-century, pond

By

Published : Sep 8, 2019, 12:10 PM IST

பதினெட்டாம் நூற்றாண்டில் பெரிய ராஜா, சின்ன ராஜா ஆகிய சிற்றரசர்களால் தெப்பக்குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி, ஆத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள இக்குளம் தற்போது அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்மேலாண்மை திட்டத்தின் கீழ் நீராதாரம் காத்தல், பாரம்பரிய நீர்நிலைகளைப் புதுப்பித்தல், ஆழ்துளை கிணறுகள் மறுபயன்பாடு, தீவிர மரம் வளர்ப்பு போன்ற திட்டங்களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது..

சேலத்தில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளம் புனரமைப்பு

இதனிடையே, இக்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை நேற்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் தொடங்கிவைத்தார். மேலும் இது குறித்து அவர், இக்குளம் பாரம்பரியமிக்க குளமாகும். இக்குளம் தூர்வாரி மறுசீரமைப்பு செய்யப்பட்டு பருவமழை காலங்களில் நீரை சேமிக்க ஏதுவாக மாற்றப்பட உள்ளது எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details