தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் கண்காணிப்பு பணியில் 16,500 சிசிடிவி கேமராக்கள் - ஹெல்மெட் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள்

சேலம்: குற்ற சம்பவங்களைத் தடுக்க 16 ஆயிரத்து 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

salem-police-commissioner
salem-police-commissioner

By

Published : Dec 4, 2019, 10:32 AM IST

சேலம் மாநகர காவல்துறை சார்பில் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெல்மெட் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் வெளியீட்டு விழா மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் செந்தில்குமார், சேலம் மாநகரில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் காவலன் செயலி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டிலேயே சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சேலம் மாநகர காவல்துறை இரண்டாமிடம் வகிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து சிறந்த விழிப்புணர்வு குறும் படங்களை உருவாக்கிய குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி காவல் ஆணையர் செந்தில்குமார் பாராட்டினார்.

குறும்பட வெளியீட்டு விழா

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சேலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 16 ஆயிரத்து 500 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் நடைபெற்றுவரும் வழிப்பறி குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்' என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சதீஷ், மாநகர காவல் துணை ஆணையர்கள் செந்தில், தங்கதுரை மற்றும் உதவி ஆணையர், ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க...

வலசகல்பட்டி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details